அன்பின் SIP நண்பர்களுக்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும் !
அன்பின் SIP நண்பர்களுக்கு
வணக்கங்களும் வாழ்த்துக்களும் !
SIP நண்பர்கள்
- 1961 ஆண்டு முதல் நடப்பு ஆண்டு வரையிலான - அனைவரையும் ஒன்றினைக்கும் நமது கூட்டு முயற்சியில்
ஒருமனப்பட்டு நாம் இணைந்து செயலாற்றி மனமகிழ்வுடன் 18 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளோம்.
'SIP நண்பர்கள்’-உடன் தங்களை இணைத்து நல் ஆதரவு நல்கி, இவ்வளர்ச்சியில் பங்களித்த
-முன்னாள் மற்றும் இந்நாள் ஆசிரியர்கள் உட்பட- அனைத்து SIP நல் உள்ளங்களுக்கும்
மன நிறைவோடு நன்றியினைச் சமர்ப்பிக்கின்றோம்.
19ம் ஆண்டின் துவக்கம்... ஆகஸ்டு மாதம் 4ம் நாள், சென்னை சந்திப்பு !
குடும்பத்தார் அனைவருடனும் வாருங்கள்... நட்பில் சந்தித்து மகிழ்வோம் !!
மே மாதம் 26ம் நாள், 2019-ல், நெல்லை SIP நண்பர்கள் சந்திப்பு,
நமது கல்லூரியில் வளமைபோல் சிறப்பாக நிகழ்ந்தது.
1989 SIP நண்பர்கள் சுமார் 50 பேர் மற்றும்
1992 SIP நண்பர்கள் சுமார் 60 பேர் உட்பட
178 SIP நண்பர்கள் தங்கள் குடும்பத்தாருடன் இணைந்து
275 பேருக்கும் மேலாக நெல்லை SIP நண்பர்கள் சந்திப்பில் பங்கெடுத்துச் சிறப்பித்து மகிழ்ந்தார்கள்.
முன்னதாகத் திட்டமிட்டு...
நெல்லை சந்திப்பிற்கு முதல் நாள் சனிக்கிழமை, 1992 SIP நண்பர்கள், பாபநாசத்தில் ஓர் நாள் முழுமையாக
தங்கள் குடும்பத்தாருடன் இணைந்து தங்கி தங்களின் நட்பை புதுப்பித்துக் கொண்டார்கள்
1989 SIP நண்பர்கள், நெல்லை சந்திப்பிற்குப்பின் அன்று மாலை NGO காலனியில்,
ஹோட்டல் ஸ்ரீ பாலாஜி, ஸ்ரீவாரி அரங்கில் குடும்பத்தாருடன் இணைந்து சந்தித்து மகிழ்ந்தார்கள்.
மே மாதம் 25 மற்றும் 26ம் நாட்களில், கோவை 'Celebrity Resort’ -இல்,
1995 நண்பர்கள் தங்கள் குடும்பத்தாருடன் -சுமார் 150 பேர்- இரண்டு நாட்கள் இணைந்து தங்கி
தங்களின் நட்பை மகிழ்ந்து கொண்டாடினார்கள்.
-இவ்விதமாக நம் நண்பர்கள், அவர்களின் நட்பு வட்டத்திற்குள் சந்திப்புக்களை நிகழ்த்திக்கொள்வது மகிழ்ச்சிக்குரியது.
நமது நண்பர்கள், அவர்கள்தம் சந்திப்புக்கள் குறித்து நமக்கும் முன்னறிவித்தால், அனைத்து SIP நண்பர்களுடனும்
அம்மகிழ்வை பகிர்ந்துக்கொள்ள இயலும்.
நன்று!
நமது புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தை
w w w . sipfriends . org -யை பார்வையிட்டீர்களா ?
அதன் முழுமையான பயன்பாட்டிற்கு User ID & Password அவசியம்.
அதை...
இணையதளத்தின் வழியாக
அல்லது
sipfriends@gmail.com –மின்அஞ்சல் வழியாக
அல்லது
‘Name’ & ‘Final Year at SIP’ -ஐ 9 4 4 5 3 7 8 2 3 2 -க்கு SMS அனுப்பி அல்லது தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்.
மேலும்... உங்களுக்கு ஏற்புடையதான Achievers (or) Entrepreneur (or) Post Resume (or) Opportunity
– எனும் பக்கங்களில் உங்களின் தகவல்களை பதிவிடுங்கள்.
உங்களின் பிறந்தநாள் மற்றும் திருமணநாள் -ஐ சரிபார்க்கவும்.
குழுக்களை (Year-wise) ஏற்படுத்தி கருத்துக்களை பகிருங்கள்.
இணையதளத்தை ஆய்வு செய்து, உங்கள் கருத்துக்களை எம்முடன் பகிர்ந்து,
நம் இணையதளத்தை மேன்படுத்த உதவுங்கள்.
உங்கள் ஆதரவிலும்… அன்பிலும்…
SIP நண்பர்களின் நட்பின் பயணம் தொடரும்…
தொடர்ந்து சந்திப்போம்…
தொடர்ந்து சாதிப்போம்…
என்றும் நட்பில் இணைந்திருப்போம்…
நட்புடன்,
ஜெகராஜன்
For SIP Friends Welfare Trust