Greetings To All SIP Friends...
அன்பின் SIP நண்பர்களுக்கு
வணக்கமும், வாழ்த்துக்களும் !
நமது சங்கர் தொழில்நுட்பக் கல்லூரியில்,
வருடந்தோறும் மே மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை 'நெல்லை SIP நண்பர்களின் சந்திப்பு' !!
இச்சந்திப்புக்களை கல்லூரி வளாகத்தில், போக்குவரத்து வசதியுடன்,
தொடர்ந்து நிகழ்த்திடும் வாய்ப்பை உறுதிப்படுத்தி தந்திட்ட
முதல்வர் திரு. சங்கரசுப்பிரமணியன் மற்றும் மேலாளர் திரு. வெங்கட்ராமன் அவர்களுக்கும்;
ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் அனைவருக்கும் நன்றியினை சமர்ப்பிக்கின்றோம்
கடந்த 18 வருட கால இடைவெளியில்...
சென்னையில் 18
நெல்லையில் 19
நமக்குள்ளே 7 (SIP/SPC -யில்)
B2B Meet-Up 4 (சென்னையில்)
பெங்களூருவில் 5
கோவையில் 3
திருச்சியில் 4
ஓசூரில் 1
- என மொத்தம் 61 நிகழ்வுகள் !!
SIP நண்பர்களின் அன்பும், நட்பும்; அவர்தம் நிபந்தனையற்ற ஆதரவுமே
இந்நிகழ்வுகளின் வெற்றிக்கு ஆதாரம்.
அனைத்து SIP நண்பர்களுக்கும்... நன்றி! நன்றி!! நன்றி!!! நன்றி!!!!
2019, ஏப்ரல் 20ம் நாள்... 'SIP நண்பர்கள் -1994' இணைத்து தங்களின் 'வெள்ளி விழா'வினை
மிகச் சிறப்பாய், மகிழ்வுடன் விமரிசையாக கொண்டாடினார்கள்.
அந்த மகிழ்வின் நினைவாக...
அந்த நண்பர்களின் உதவியுடன்...
நமது இணையதளம் www.sipfriends.org
புதிதாய், புதுப்பொலிவுடன், புதிய வசதிகளுடன் மெருகேற்றப்பட்டு;
வணக்கத்திற்குரிய நம் ஆசான் திரு. அனந்தராமகிருஷ்ணன் அவர்களால்
2019, மே 26, ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த நெல்லை SIP நண்பர்களின் சந்திப்பின்போது
நமது பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட வருடத்தைச் சார்ந்த நம் நண்பர்கள், அவர்களின் சந்திப்புக்கள் குறித்து நமக்கும்
முன்னறிவித்தால், அனைத்து SIP நண்பர்களுடனும் அதை பகிர்ந்து மகிழ்வோம்!
உங்கள் ஆதரவிலும்... அன்பிலும்...
SIP நண்பர்களின் நட்பின் பயணம் தொடரும்...
தொடர்ந்து சந்திப்போம்...
தொடர்ந்து சாதிப்போம்...
என்றும் நட்பில் இணைந்திருப்போம்...
நட்புடன்
ஜெகராஜன்
For SIP Friends Welfare Trust